மகிழ்ச்சியான திருப்தியான ஒரு வெற்றிகரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கக் கூடிய இயல்பான ஆசையாகும். இந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யவே நாம் பல முயற்சிகைளைச் செய்கின்றோம். ஆனால் சில சமயம் நாம் வெற்றியினையும் சில சமயம் தோல்வியினையும் அடைகின்றோம். வெற்றியினையும் தோல்வியினையும் சமமாக பார்க்கும் வல்லமை எமக்கு இருக்கின்றதா?
பக்குவப்பட்ட மனம் வெற்றி தோல்விகளால் தளம்புவதில்லை. தியானம் மனதைப் பக்குவப்படுத்துகின்றது. வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை எதிர் கொள்ளும் வல்லமையையும் விவேகத்தையும் வளர்க்கின்றது. உண்மையான மகிழ்ச்சியுடன் இணைந்த இலக்கு நோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றது.
தியான வர்ணனை
நான் யார்?
பரமாத்மாவின் திவ்ய குணங்களை அனுபவம் செய்தல்
சுயத்தை சக்தியூட்டல்
தியானத்திற்கான இசை
புல்லாங்குழல் இசை
இலேசாக இருத்தல்
மனதையும் உடலையும் குணப்படுத்தல்
பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம்
அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மனிதனைப் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெறச் செய்கின்றன. அந்த வகையில் பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம் மனிதனின் மன வலிமையை வளர்த்து இலக்கு நோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கின்றது. மேலும் அன்றாட வாழ்வில் பயிற்சி செய்யக் கூடிய எளிமையான தியானப் பயிற்சிகள் மற்றும் இலவச வகுப்புக்கள் மூலம் சுயகௌரவம் நிறைந்த ஆளுமையை வளர்க்க உதவுகின்றது. இப்பல்கலைக்கழகத்தின் சகல செயற்பாடுகளும் கட்டணங்கள் ஏதுமின்றி சமுதாயத்திற்கு ஒரு சேவையாக வழங்கப்படுகின்றன. பிரம்ம குமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகத்தின் தலைமையகம் இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அபுமலை எனும் இடத்தில் அமைந்துள்ளது.;
சுவிற்சர்லாந்தில் 1980ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சேவையானது சூரிச் ஜெனீவாவில் பிரதான நிலையங்களையும் லவுசான் லுசேர்ன் பீல் மற்றும் குரோஸ்வங்கன் ஆகிய இடங்களில் கிளை நிலையங்களையும் கொண்டு இயங்கி வருகின்றது.
கட்டுரைகள்
வாழ்வின் பதினாறு கலைகள்
செய்திமடல் பதிவுகள்
உங்கள் வினாக்களுக்கு விடை காண எங்களுக்கு எழுதுங்கள்
Regensbergstrasse 240, 8050 Zürich
+41 (0)76 722 59 00